நாகை மாவட்டத்தில் பெய்த கனமழையால், 1000 ஏக்கரிலான தாளடி நெற் பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். கீழ்வேளூர், திருக்குவளை, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இரவு பகலாக கொட்டித் தீர்த்த கனமழையால் விளைநிலங்கள் கடல் போல் காட்சியளிக்கின்றன. இதில் தாளடி நெற்பயிர்கள் முழுவதுமாக மூழ்கியதால் கவலை அடைந்த விவசாயிகள், ஏக்கருக்கு 15 ஆயிரம் வீதம் செலவு செய்தும் அனைத்தும் நஷ்டம் ஆகிவிட்டதாகவும், அதிகாரிகள் பார்வையிட்டு மறு சாகுபடி செய்வதற்கு தேவையான விதை நெல், உரம் போன்றவற்றை மானிய விலையில் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.