மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் தரக்கட்டுப்பாடு மேலாளரை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 170 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் செய்யப்படுவதால் எடை இழப்பு ஏற்படுவதாகவும், தரக்கட்டுப்பாடு மேலாளர் விரோத போக்குடன் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி டிபிசி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊழியர் ஒருவர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.