புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கில் கைதான ராசு மற்றும் ராமையாவுக்கு சொந்தமான இடத்தில் 490 டாரஸ் லாரிகளுடன் சட்ட விரோதமாக குவாரி கற்கள் பதுக்கி வைத்திருந்ததாக கூறி, அந்த இடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கனிமவள கொள்ளை குறித்து புகார் அளித்த ஜகபர் அலி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.