வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே ஏர்த்தாங்கல் கிராமத்தில் நடைபெற்ற கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவில், பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி நேர்த்திக்கடன் செலுத்தினர். காளியம்மன் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்த கெங்கையம்மன் சிரசு மீது, பக்தர்கள் மலர் மாலைகள் மற்றும் எலுமிச்சம்பழ மாலைகளை வீசியும், தேங்காய்களை சூறையிட்டும் வழிபட்டனர்.