எளிமையான முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதற்கு ஒன்றரை கோடி ரூபாயில் சொகுசு கார் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார். புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாராயணசாமி, முதலமைச்சர் ரங்கசாமி மாதம் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்குவதாக குற்றம்சாட்டினார்.