Also Watch
Read this
By: Fyrose Banu

குன்னத்தூர் அருகே உள்ள தேவாலய வளாகத்தில் அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கு தேவாலய பாதிரியாராகவும், தாளாளராகவும் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த ராபர்ட் (57) என்பவர் கடந்த நான்கு வருடங்களாக பணியில் உள்ளார். இந்நிலையில் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்களின் ஒரு சிலர் 9ம் தேதி திடீரென அவசர போலீஸ் எண் 100க்கு அழைத்து தாளாளராக உள்ள பாதிரியார் ராபர்ட் மாணவிகளை பாலியல் ரீதியாக தொடுதல் போன்ற செய்கைகள் செய்வதாக புகாரளித்துள்ளனர். இதையடுத்து குன்னத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சுசீலா மற்றும் குழந்தைகள் நல அலுவலர் நேரில் சென்று விசாரணை செய்ததில் ராபர்ட் பா*யல் ரீதியாக குழந்தைகளை துன்புறுத்தியது தெரியவந்தது.


இதையடுத்து குன்னத்தூர் போலீசார் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி, பாதிரியார் ராபர்ட் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved