திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மூதாட்டிகளை குறிவைத்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த தாயையும் மகனையும் போலீசார் கைது செய்தனர்.பழனி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து தொடர் வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறி வந்தன.அரிமா நகரில் ராமாத்தாள் எனும் 73 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்க சங்கிலியும், லட்சுமிபுரத்தை சேர்ந்த ஸ்ரீதிவ்யா என்பவரிடம் 2 பவுன் சங்கிலியும் பறிக்கப்பட்டது.இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மூதாட்டிகளை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட மடத்துக்குளத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவனையும், உடந்தையாக இருந்த அவனது தாய் பார்வதியையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.