அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் பேசியது உண்மை தான் என்ற செங்கோட்டையன், தேவர் குருபூஜையில் கலந்து கொண்டதால் தான் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:கடந்த 1975ஆம் ஆண்டு, கோவையில் நடைபெற்ற அதிமுகவின் முதல் பொதுக்குழுவில் பங்கேற்றேன். பொதுக்குழுவைச் சிறப்பான முறையில் நடத்தியதற்காக எம்.ஜி.ஆரிடம் பாராட்டுக்களைப் பெற்றவன்.அனைவரையும் ஒன்றிணைக்கும் கருத்தை, எடப்பாடி பழனிசாமி ஏற்காததால் தான், கடந்த 5ஆம் தேதி மனம் திறந்து பேசினேன். தொடர் தோல்வியால் தான் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் அனைவரையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினேன். அதிமுக உடைந்துவிடக் கூடாது என்பதற்காக, 2 முறை கிடைத்த வாய்ப்புகளை விட்டுக் கொடுத்தேன். 2019, 2021, 2024ஆம் ஆண்டுகளில், இபிஎஸ் எடுத்த முடிவுகளால், அ.தி.மு.க. தோல்வியைத் தழுவியது. தோல்வியே இல்லை என்ற நிலையில் இருந்தவர் எம்.ஜி.ஆர். இபிஎஸ்-க்கு பரிந்துரைக் கடிதம் வெளியிட்டவன் நான் தான்.தி.மு.க.விற்கு நான் உறுதுணையாக இருப்பதாக, இபிஎஸ் கருத்தை வெளியிட்டு இருக்கிறார். பி டீம் என்று சொல்லியிருக்கிறார். பி டீம் யார் என்பதை நாடறியும். இன்று வரையில் நான் பி டீமில் இல்லை, ஏ1-ல் அவர் இருக்கிறார். இபிஎஸ் அ.தி.மு.க-விற்கு வருவதற்கு முன்பே நான் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன். கட்சியில் சீனியர் என்ற முறையில் எனக்கு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும். அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன். அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்கவே தேவர் ஜெயந்தியில் டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ் உள்ளிட்டோரை சந்தித்தேன். தேவர் ஜெயந்தியில் பங்கேற்றதற்கு கிடைத்த பரிசு தான் கட்சியில் இருந்து நீக்கியது. இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார். இதையும் பாருங்கள் - இருமுறை கிடைத்த வாய்ப்பை உதறினேன் - மனம் திறந்த செங்கோட்டையன் | AIADMK