சென்னையில் மெத்தப்பெட்டமைன் போதை பொருட்களை விற்பனை செய்துவந்த பெங்களூருவை சேர்ந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். விருகம்பாக்கம், வெங்கடேஸ்வரா நகரில் போதைப்பொருள் விற்பனை குறித்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, வாடிக்கையாளர் போல் பேசி விற்பனையாளர்களுக்கு போலீசார் வலைவிரித்தனர். பின்னர் விற்பனை நடைபெறும் இடத்துக்கு சென்ற போலீசார் கோவூரை சேர்ந்த ராஜேஷ்குமார், சாலிகிராமத்தை சேர்ந்த சாய்பாலாஜி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 42 கிராம் மெத்தப்பெட்டமைனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு சப்ளை செய்த பெங்களூருவை சேர்ந்த அருண், ரிஸ்வான், சையது நூர், ஷாருக், நிதின் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.