செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு பள்ளி மாணவிகள் பள்ளி வளாகத்தில் தூய்மை பணியில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தலூர் கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு உயர்நிலைபள்ளியில் தலைமை ஆசிரியர் கட்டாயப்படுத்தி தூய்மை பணிகளை செய்ய வைப்பதாகவும், அட்டவணைப்படி தூய்மை பணியில் ஈடுபடுத்த படுவதாகவும் பள்ளி மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.