கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக வெளியான வீடியோ வைரலான நிலையில் விற்பனையாளரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பு.ஆதனூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடையில், மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டார். அந்த வீடியோவில் விற்பனையாளர், கூடுதலாக பணம் வசூல் செய்வது அமைச்சர் வரை அனைவருக்கும் தெரியும், என பேசியது வைரலானதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.