மருத்துவக் கழிவுகள் கொண்டு செல்வதாக பரவிய வதந்தியால் கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற கன்டெய்னர் லாரி சத்திரப்பட்டி சுங்கச்சாவடியில் சோதனை செய்யப்பட்டது. பாலக்காட்டில் இருந்து இறைச்சிக் கழிவுகளை ஏற்றிக் கொண்டு சென்ற கேரள பதிவெண் கொண்ட லாரியில் இருந்து அதிக துர்நாற்றம் வீசியதால் சோதனை செய்யப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள் இருந்ததால் விடுவிக்கப்பட்டது.