news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews "Rest எடுத்து Rest எடுத்து Tired" - விஜயை விமர்சித்த உதயநிதி
tv

Also Watch

tv

Read this

"Rest எடுத்து Rest எடுத்து Tired" - விஜயை விமர்சித்த உதயநிதி

"அட்டை என அன்று பேசியது நிரூபணம்"

13

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி என 2 தொகுதியில் தாம் போட்டியிடுவதாக சில தற்குறிகள் பேசுவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்தவர், சிலர் ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்தே டயர்ட் ஆகி விட்டதாகவும், அட்டை என தாம் பேசியது நிரூபணமாகி வருவதாகவும் விஜயை மறைமுகமாக தாக்கியும், கிண்டலடித்தும், பேசினார்.

திருச்சியில் வாக்கு சேகரிப்பு
திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;
இனிகோ இருதயராஜ் போட்டியிடுவதால் தான் இந்த தொகுதி ஸ்டார் தொகுதியாக உள்ளது. திருச்சி கிழக்கு தொகுதி சிறுபான்மை மக்கள், குறிப்பாக, கிறிஸ்தவ மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதி. திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் கிறிஸ்தவ மக்களுடைய முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

ஓய்வு எடுத்து... ஓய்வு எடுத்து...
நாம் மற்றவர்களைப் போல் ஓய்வு எடுத்துக் கொண்டு பிரச்சாரம் செய்யவில்லை. சிலர் ரெஸ்ட் எடுத்து, ரெஸ்ட் எடுத்து டயர்ட் ஆகி விட்டார்கள். கொரோனா காலத்தில் உலகமே முடங்கி இருந்த போதும் திமுகவினர் தான் உயிரை பணயம் வைத்து மக்களை காத்தார்கள். இனிகோ இருதயராஜிற்கு சென்னையிலும் பல நண்பர்கள் உண்டு, திருச்சியிலும் நண்பர்கள் உண்டு, அதற்காக அவர், சென்னையில் ஒருகால் திருச்சியில் ஒரு கால் வைத்துக் கொண்டு, இரண்டு தொகுதியில் நிற்கவில்லை. திருச்சி கிழக்கு தொகுதியில்
தான் நிற்பேன் என உறுதியாக, இங்கு நிற்கிறார்.

புறக்கணித்து விட்டு உழைக்க வேண்டும்
ஒரு இடத்தில் நின்றாலும், நிச்சயமாக மக்கள் வெற்றி அளிப்பார்கள் என்கிற நம்பிக்கையோடு அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என சில தற்குறிகள் பேசுகிறார்கள் அவர்களிடம் போய் நாம் என்ன சொல்வது? அவர்களை புறக்கணித்துவிட்டு நாம் உழைக்க வேண்டும்.
அட்டை பறந்து விடும்
திருவிழா கூட்டங்களில் தாஜ் மஹால் போன்ற உலக அதிசயங்களின் அட்டைகளை வைத்திருப்பார்கள். மக்கள் ஆர்வமுடன் சென்று பார்ப்பார்கள். திருவிழா முடிந்த பின்பு அதை எடுத்து சென்று விடுவார்கள் அப்போது தான் தெரியும், அது வெறும் அட்டை என்று. இன்று களத்தில் அது வெறும் அட்டை தான் என்பது நிரூபணம் ஆகி உள்ளது, காற்று அடித்தால் அது பறந்து போய்விடும். திருச்சி கிழக்கு தொகுதி என்பது அறிவார்ந்த படித்த மக்கள் நிறைந்த தொகுதி என்பதை வாக்காளர்கள் நிரூபித்து காட்ட வேண்டும்.
இவ்வாறு பேசி, உதயநிதி வாக்கு சேகரித்தார்.

Related Link
மீனவர்கள், படகு பாதுகாப்பு நிதி - விஜய் வாக்குறுதி

மீனவர்கள், படகு பாதுகாப்பு நிதி - விஜய் வாக்குறுதி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

2
9 hrs 43 mins agoshare
லாட்டரி விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved