காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்கள் மூலம் நடைபெறும் உற்பத்தியை தடுத்து நிறுத்தியதாக 13 சிஐடியு தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்தநிலையில், உள்ளிருப்பு போராட்டத்தை ரத்து செய்த ஊழியர்கள், இன்று முதல் நிறுவனத்திற்கு வெளியில் இருந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.