மயிலாடுதுறை மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் செம்பனார்கோவில் கடைவீதியில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அவதி அடைந்த நிலையில், வடிகால்களை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.