புதுச்சேரியில் உள்ள அரசு உணவகமான சீகல்ஸ் மற்றும் ஏ.எஃப்.டி மில் ஒருபோதும் தனியாருக்கு தாரை வார்க்கப்படாது என சட்டப்பேரவையில் சபாநாயகர் செல்வம் உத்தரவாதம் அளித்தார். புதுச்சேரி அரசு உணவகத்தை திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் விலை பேசியது மற்றும் ஏ.எஃப்.டி மில்லை லாட்டரி அதிபர் ஜோஸ் மார்ட்டின் விலை பேசியது தொடர்பாக பேரவையில் பாஜக எம்.எல்.ஏ. அசோக்பாபு கேள்வி எழுப்பினார்.