திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மெதுர் பகுதியில் கடந்த ஆண்டு வழங்கவேண்டிய பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பழவேற்காடு - பொன்னேரி சாலையில் செல்லும் பேருந்துகளை மறித்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.