Also Watch
Read this
By: Manigandan Raja
கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா புழக்கம். மாணவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் மூலம் சிக்கிய கேரள கும்பல். கேரள கும்பல் மூலம் சிக்கிய சாமியார். கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதையாக கஞ்சா கும்பலை பிடிக்க இறங்கிய காக்கிகள் கையில் சிக்கிய ஒரு கொலை குற்றவாளி. சாமியார் வேடத்தில் சுற்றிக் கொண்டிருந்த குற்றவாளி யார்? அவர் யாரை கொலை செய்தான்? எதற்காக கொலை செய்தான்? பின்னணி என்ன?

ஒரு சாமியார் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவல்
காலேஜ்க்கு வர்ற மாணவர்களுக்கு கஞ்சா ஈசியா கிடைக்கிறதாகவும் அத கட்டுப்படுத்தலனா மாணவர்களோட எதிர்காலமே கேள்விக்குறியாகிரும்னும் மாவட்ட எஸ்.பி.க்கு பேராசிரியர்கள் கம்ப்ளைண்ட் பண்ணிருக்காங்க. அதுக்குப்பிறகு கல்லூரிக்கே நேர்ல வந்த காவல்துறையினர் மாணவர்கள்கிட்ட விசாரிச்சிருக்காங்க. அப்போ, வேளாங்கண்ணி லாட்ஜ்ல சிலர் இருக்குறதாகவும், அவங்கதான் கஞ்சா சப்ளை பண்றதாகவும் சொல்லிருக்காங்க மாணவர்கள். அடுத்து, அந்த லாட்ஜ்க்கு போன போலீசார் அங்க பல நாளா தங்கி இருந்த ஒரு கும்பலை பிடிச்சி தங்களோட பாணியில விசாரிச்சிருக்காங்க. அப்போ, கேரளாவுல உள்ள ஒரு கும்பல்தான் தங்களுக்கு கஞ்சா சப்ளை பண்றதா சொல்லிருக்காங்க லாட்ஜ்ல இருந்த கும்பல். அதுக்குப்பிறகு, கேரளாவுல உள்ள அந்த கும்பல பிடிச்சி விசாரிச்சப்ப ஒரு சாமியார்தான் எங்களோட கஞ்சா விற்பனை குருவே, அவரு இல்லாம எங்க பிசினஸே இல்லனு சொல்லிருக்காங்க. அடுத்து, கேரளா கும்பல் உதவியோட அந்த சாமியாரை சுத்தி வளைச்சி பிடிச்சி விசாரிச்சப்பதான் இது வெறும் கஞ்சா விற்பனை வழக்கு மட்டுமில்ல, நாலு வருஷத்துக்கு முன்னால நடந்த ஒரு கொலை வழக்கையே முடிவுக்கு கொண்டு வரப்போகுது அப்டிங்குறது தெரியவந்துச்சு.
மகேஷ்வரன்-ரமேஷ் இருவருக்கும் இருந்த தொழில் போட்டி
கருவேலங்கடை சாலையில் கஞ்சாவுடன் சிக்கிய சாமியார்

சாமியார் வேடத்தில் ஏமாற்றிய ரோசரி கிரேட்டன் கைது
மனோகரன் கொலை வழக்குல போலீஸ்ல சிக்காம இருக்க தாடி வளத்து, சாமியார் வேஷம்போட்டு சுத்துன ரோசரி கிரேட்டன், கஞ்சா கடத்தி சேல்ஸ் பண்ணிட்டு இருந்துருக்கான். அதுமட்டுமில்லாம, Club house என்ற செயலி மூலம் பெரிய டீமை உருவாக்கி அந்த டீம் மூலம் லாட்ஜ் ஓனர்கள், கடை வியாபாரிகளை மிரட்டி மாமூல் வேட்டையிலயும் ஈடுபட்ருந்துருக்கான். நடந்த அத்தனை விஷயத்தையும் ரோசரி கிரேட்டனே போலீசார்கிட்ட வாக்குமூலமா சொல்லிருக்கான். இதுஒருபக்கம் இருக்க, ரோசரி கிரேட்டனோட கஞ்சா கடத்தல்ல ஈடுபட்ட கும்பலையும் போலீசார் வலைவீசி தேடிட்டு இருக்காங்க.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved