வேலுநாச்சியார், பெரியார், அண்ணாவை யார் ஏற்றுக்கொண்டாலும், தமிழகத்தில் திராவிடம் இல்லாமல் யாரும் அரசியல் செய்யமுடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கான்கிரீட் போன்று வலிமையாக உள்ள திமுக கூட்டணியை எதை வைத்து உடைத்தாலும் உடைக்க முடியாது என்றார்.