Also Watch
Read this
Posted on: Nov 18, 2025 09:59 AM
By: Web Team

சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளில், சென்ட்ரல், மந்தைவெளி, ஆயிரம் விளக்கு, திருமங்கலம், பெருங்குடி, உள்ளிட்ட 22 மெட்ரோ ரயில் நிலையங்களில் 30 லட்சம் சதுர அடியில் அலுவலகங்கள் மற்றும் வணிக இடங்கள் அமைக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 3 ஆண்டுகளில் இந்த பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 3 வழித் தடங்களில் 118.9 கி.மீ. தொலைவுக்கு பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் 2028ல் முடிந்து, மெட்ரோ ரயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்கள் உட்பட மொத்தம் 138 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved