நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே திருமண வீட்டில், மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் கலந்து குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செட்டிமேடு கிராமத்தை சேர்ந்த பால்பாண்டி - அமுதா தம்பதியரின் மகள் புஷ்பாவுக்கு, புதன்கிழமை அன்று தான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர், பால்பாண்டி வீட்டில் மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடினர். நல்வாய்ப்பாக யாருக்கும், எவ்வித பாதிப்பும் ஏற்படாத நிலையில், விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.