வார விடுமுறையையொட்டி குற்றல அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குற்றலாத்தில் சீசன் முடிவற்ற நிலையிலும், அருவி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும தொடர் மழையால் குற்றாலம் பிரதான அருவி, சிற்றருவி, ஐந்தருவி பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக காணப்பட்டது. வார விடுமுறையை கொண்டாட குற்றலாத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், குழந்தைகளோடு அருவிகளில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர். ஐயப்ப பக்தர்களும் குற்றால அருவியில் குளிக்க வந்ததால் அருவி களைகட்டியது.