திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், அதிகாலையில் மருந்தகத்தில் ஊழியர்கள் யாரும் பணியில் இல்லை என குற்றம்சாட்டி நோயாளி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதிகாலை 5.30 மணியளவில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற நோயாளி, சிகிச்சைக்கு பின் மருந்து மாத்திரைகளை வாங்குவதற்காக மருந்தகத்துக்கு சென்றுள்ளார். அங்கு யாரும் பணியில் இல்லாததால் நீண்ட நேரமாக காத்திருந்தவர், பின்னர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.