சிவகங்கை மாவட்டம், கீழக்குளத்தில் காட்டிற்குள் பிறந்தநாள் கொண்டாடிய சரித்திர பதிவேடு குற்றவாளிகள்.ட்ரோன் கேமரா மூலம் ரவுடிகளின் இருப்பிடத்தை அறிந்து சுற்றிவளைத்து இருவரை கைது செய்த போலீசார். சிவகங்கை மாவட்டம், கீழக்குளம் என்ற கிராமத்தில் காட்டுப்பகுதியில் குற்றவாளிகள் அடிக்கடி ஒன்று கூடி குற்ற சம்பவங்கள் செய்வதற்கு திட்டம் தீட்டுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் தொடர்ந்து கிடைத்தது. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பல பகுதிகளில் இருந்த வந்த குற்றவாளிகள் ஒன்றிணைந்து இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து காவல்துறை சிறப்பு தனி காவல் படையை அமைத்து அந்தப் பகுதியை சுற்றி வளைத்தது. குற்றவாளி இடத்தை கண்டறிவதற்காக ட்ரோன் கேமராவை பயன்படுத்தி அவர்கள் இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டறிந்து அவர்களை நெருங்கிய போது, குற்றவாளிகள் காவல்துறையை கண்டதும் தப்பி ஓடி உள்ளார்கள். இதில், காவல்துறை இருவரை கைது செய்ததோடு அங்கிருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தது.