சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கண்மாயில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுமியின் பெற்றோர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் பெரியகருப்பன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார். அங்கன்வாடியில் படித்து வந்த இரு சிறுமிகள் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது கண்மாயில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.