நக்சல் தேடுதல் வேட்டையின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த துணை ராணுவ படை உதவி ஆய்வாளரின் உடல், அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சுண்ணாம்புகரடு பகுதியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஆந்திராவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது நக்சல்கள் ஏற்படுத்திய மின்சார வேலியில் சிக்கி திருநாவுக்கரசு உயிரிழந்தார்.