தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கள்ளர் பள்ளி விடுதிகளை சமூகநீதி விடுதியாக பெயர் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துப்பட்டி கிராமத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஊரே ஒன்றுதிரண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.