கரூரில் உள்ள கே.ஆர்.ஆர். மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பண்டுதக்காரன் புதூரில் உள்ள கே.ஆர்.ஆர்.கல்லூரி மாணவிகள், கேரள மாடல் புடவைகள் அணிந்து கல்லூரியின் வளாகத்தில் வண்ண, வண்ண மலர்களை கொண்டு கோலமிட்டு மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து, வாத்தியங்கள் முழங்க மாணவிகள் வட்ட வடிவில் நின்று திருவாதிரை நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.