மார்கழி மாத வெள்ளிக்கிழமையை ஒட்டி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், தங்கத் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்ட காஞ்சி காமாட்சி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி- சரஸ்வதி தேவியர்களுடன் தங்க திருத்தேரில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தில் வலம் வர, பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.