தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வதற்காக, சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதற்காக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சாரை சாரையாக மக்கள் வருகை தந்தனர்.