சென்னை ராயப்பேட்டை காவல்நிலையம் எதிரே உள்ள கடையில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யவதாக நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதன் எதிரொலியாக கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை விற்பனை செய்யப்படுவதாக செய்தி வெளியானதை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறையினர் ராயப்பேட்டை காவல்நிலையம் எதிரே உள்ள கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு குட்கா விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்ததால், கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.