விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நித்தியானந்தா ஆசிரமத்தை காலி செய்ய மறுத்து, சிஷ்யைகள் கதவை பூட்டிக் கொண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபாளையம் மருத்துவர் கணேசன், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரமத்துக்கு தானமாக வழங்கிய நிலத்தை மீட்டுத் தரக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால், இரு தரப்பினரும் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.