Also Watch
Read this
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. விளம்பர பதாகைகளை அகற்ற மாநகராட்சி உத்தரவு
விளம்பர பதாகைகளை அகற்றம்
Updated: Oct 01, 2024 09:39 AM
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் விளம்பரப் பதாகைகளை அகற்ற மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்றிரவு மாநகராட்சி ஊழியர்கள், ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மாநகராட்சியில் நேற்று மட்டும் 300க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved