திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாலையோர மரங்களை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற போலீசுடனும் மக்கள் வாக்குவாதம் செய்ததால் பதற்றம் ஏற்பட்டது .