news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews புகார் அளித்து 4 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை
tv

Also Watch

tv

Read this

புகார் அளித்து 4 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை

Chennai

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
முன்னாள் காதலன் தாக்கிய சிசிடிவி

தமிழக காவல்துறை முதல்வர் விஜய் சமூகவலைதள பக்கத்தை இணைத்து பெண் நியாயம் கேட்டு பதிவு.. செயல்படாத சிங்கப் பெண் அதிரடிப்படை திட்டம்?

தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்ற உடன் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதல் கையெழுத்தாக சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்திற்கான அரசாணையை வெளியிட்டார்.

ஆனால் சிங்கப் பெண் அதிரடிப்படை திட்டம் அரசாணை வெளியிடப்பட்டு அடுத்த கட்டமாக முழுமையான செயல்பாட்டிற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் முதன்முதலாக தலைமைச் செயலகத்திற்கு வெளியில் திட்ட துவக்க நிகழ்ச்சி என்ற அடிப்படையில், சிங்கப் பெண் அதிரடி படைத்திட்ட துவக்க நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டு திடீரென ரத்து செய்யப்பட்டது.

இதன் காரணமாக அந்தத் திட்டம் முறையாக துவங்கப்படாததால் செயல்படாமலேயே முறையான போலிசார் போடப்பட்டு தமிழக முழுவதும் செயல்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பெண்கள் பாதிக்கப்பட்டால் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்த நிலையில் சென்னையில் குறிப்பாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வெற்றி பெற்ற பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் வசித்து வரும் பெண் ஒருவரை வீட்டிற்கு வந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புகார் அளித்தும் நான்கு நாட்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை வேதனையுடன் பாதிக்கப்பட்ட பெண் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

செம்பியம் காவல் மாவட்ட பகுதியில் பெரம்பூரை சேர்ந்த சகாய பெவின் பெர்னாண்டோ மேக்கப் கலைஞராக வேலை பார்த்து வருகிறார். சமூக வலைதளத்தில் சஞ்சனா என்ற பெயரிலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை துவங்கி முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை வைத்து மேக்கப் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி செம்பியம் காவல் மாவட்ட பகுதியைச் சேர்ந்த சகாய பெவின் பெர்னான்டோ, தன்னை முன்னாள் காதலன் வீடு தேடி வந்து தாக்கியதாக செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

தனது சமூக வலைதள பக்கத்தில் முன்னாள் காதலன் வீடு தேடி வந்து வாசலில் சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகளையும் தான் தாக்கப்பட்டது தொடர்பாக நியாயம் கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக கடந்த 31 ஆம் தேதி புகார் அளித்தும் நான்கு நாட்கள் ஆகியும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என வேதனை தெரிவித்து சமூக வலைதளத்தில் சிசிடிவி காட்சிகள் மற்றும் தன்னைத் தாக்கியது தொடர்பாக புகார் அளித்து ஏ ஆர் ஆவணங்களையும் வைத்திருப்பதாக கூறி பதிவிட்டுள்ளார்.

கொடூரமாக தாக்கப்பட்டதால் ஏற்பட்ட ரத்தக் காயங்கள் எங்கெங்கு ஏற்பட்டுள்ளது என்ற புகைப்படத்துடன் பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்டுள்ளார்.

முன்னாள் காதலன் என்றாலும் காதல் பிரச்சனை இருந்தாலும் எப்படி வீடு தேடி வந்து ஒரு ஆண் அடிக்கலாம் என கேள்வி எழுப்பி உள்ளார். தான் மன அழுத்தத்தை இருப்பதாகவும் தனக்கு யாரும் சமூக வலைதள பக்க பதிவை பார்த்து தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் உதவ வேண்டும் என்றால் இந்த பதிவை பகிருமாறு ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

தமிழ்நாடு காவல்துறை மற்றும் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் சமூக வலைதள பக்கத்தையும் இணைத்து இந்த நியாயத்தை மேக்கப் கலைஞர் ஆன சகாய பெவின் பெர்னாண்டோ நியாயம் கேட்டு சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் .இந்த சமூக வலைதளப் பதிவு தற்போது வைரலாக மாறி உள்ளது.

ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு புகார்களின் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்த நிலையில் புகார் அளிக்கும் நான்கு நாட்களாக காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என காயங்களுடன் சென்னையில் பெண் ஒருவர் வெளியிட்ட சமூக வலை பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடியை சந்தித்த வெனிசுலா பொறுப்பு அதிபர்

1
8 hrs 11 mins agoshare
வெனிசுலா பொறுப்பு அதிபர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved