Also Watch
Read this
By: Manigandan Raja

எரிசக்தி உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை :
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள வெனிசுலா பொறுப்பு அதிபர் டெல்சி, பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு இடையே எரிசக்தி உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்த தலைவர்கள்.
எரிசக்தி துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
குஜராத்தில் சட்டவிரோதமாக குடியேற்றம் :
குஜராத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தினர் 501 பேர், கடந்த 2 நாட்களில் அம்மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஆபரேஷன் டெல்டா ஹண்ட் என்ற பெயரில் வங்கதேசத்தினரை பிடிக்கும் பணி நடைபெற்றது. சட்டவிரோத ஊடுருவியிருந்த வங்கதேசத்தினரிடம் இருந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
மேகதாது அணை - தமிழ்நாடு அரசியல் செய்வதாக புகார் :

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசியல் செய்வதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த
அவர், மேகதாது அணை விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டதாகவும், சட்டம், நீதிமன்ற வழிகாட்டுதலின் படியே கர்நாடக அரசு செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
சம்பவ இடத்திலேயே வெடிகுண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன :

சத்தீஸ்கரின் ஹிதூர் வனப்பகுதியில், மாவட்டக் காவல்துறை, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் வெடிகுண்டு அகற்றும் குழுக்கள் இணைந்து மேற்கொண்ட நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின்போது, தலா 3 கிலோ எடையுள்ள மூன்று IED வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் அந்த வெடிபொருட்கள் சம்பவ இடத்திலேயே செயலிழக்கச் செய்யப்பட்டன.
மேம்பாலப் பணியின்போது, கிரேன் கவிழ்ந்து விபத்து :

ஹரியானாவின் பஹ்னேடா குர்த் அருகே கட்டப்பட்டு வரும் ஜேவார் விமான நிலைய மேம்பாலப் பணியின்போது, கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 தொழிலாளிகள் உயிரிழந்தனர். இந்த விபத்தி படுகாயமடைந்த 4 பேரை மீட்ட மீட்பு குழுவினர், அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved