கடலூர் மாவட்டம் காத்தாழை கிராமத்திற்கு விவசாய நிலங்களை பார்வையிட சென்ற புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவனிடம் NLC நிர்வாகம் தண்ணீரை நிறுத்தி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் தண்ணீரை நம்பி, கத்தாழை கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்த நிலையில் திடீரென என்எல்சி நிறுவனம் விவசாய நிலத்திற்கு செல்லும் தண்ணீரை நிறுத்தியது. நாற்றங்காலை காப்பாற்ற விவசாயிகள் குடத்தின் மூலம் தண்ணீர் தெளித்து பயிரை காப்பாற்ற போராடும் நிலையில்,நிலத்தை கையகப்படுத்துவதில் அக்கறை காட்டும் என்எல்சி நிர்வாகம், விவசாயிகளின் வாழ்வாதாரம் இழப்பீடு ஆகியவற்றில் காட்டுவதில்லை என புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவன் குற்றஞ்சாட்டினார்.