பொள்ளாச்சி அருகே CISCE பள்ளிகளுக்கு இடையே தேசிய அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது.பொள்ளாச்சி அருகே ஆச்சிபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் திசா இன்டர்நேஷனல் பள்ளியில் CISCE பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டிகள் கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. இதில் தமிழகம், மேற்குவங்கம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 14,17,19 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில், போட்டி நடத்தப்பட்டது.நாக்-அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், முதல் மூன்று பிரிவுகளில் முதல் 4 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம், சான்றிதழ்வழங்கப்பட்டது.