சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடந்த மீன்பிடித் திருவிழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கட்லா, விராமீன், கெண்டை உள்ளிட்ட மீன்களை பிடித்து சென்றனர். நாகப்பன்பட்டி முக்குலத்தி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மட்டுமின்றி புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர். மீன்பிடிக்க அனுமதி கிடைத்தவுடன் கையில் ஊத்தா குடைகளுடன் தலைதெறிக்க ஓடி கண்மாய்க்குள் இறங்கி போட்டிபோட்டு கொண்டு மீன்பிடித்தனர்.