மயிலாடுதுறை மாவட்டம் மேலச்சாலை அன்னை அஜ்மத் பீவி தர்காவில் நடைபெற்ற 84-வது சந்தனக்கூடு கந்தூரி விழா கொடியேற்றத்தில் அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். கொடியேற்றத்தை முன்னிட்டு, சிறப்பு துஆ ஓதப்பட்ட நிலையில், ஒருவார காலத்துக்கு சிறப்பு பாத்தியாக்கள் ஓதப்பட்டு, 7-ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம் நடைபெறுகிறது.