புதுச்சேரியில் பணி நிரந்தரம் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ரொட்டி மற்றும் பால் வழங்கும் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்த சம்பள உயர்வை வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் கைலாசநாதனை கண்டித்து, இந்திரா காந்தி சிலை அருகே ரொட்டி-பால் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையும் படியுங்கள் : சிறப்புக்கூறு நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும்.. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவுறுத்தல்