கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மிதமான வெப்பம் நிலவி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அடர்ந்த பனி மூட்டமும், அதை தொடர்ந்து மாலையில் சாரல் மழையும் பெய்தது. அதன் தொடர்ச்சியாக பேருந்து நிலையம், நாயுடுபுரம், மூஞ்சிக்கல், அனந்தகிரி, பண்ணைகாடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழையும் பெய்தது.