news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தவறவிட்ட ரூ. 26 லட்சம் - எடுத்துச்சென்றவரை அலேக்காக தூக்கிய போலீஸ்
tv

Also Watch

tv

Read this

தவறவிட்ட ரூ. 26 லட்சம் - எடுத்துச்சென்றவரை அலேக்காக தூக்கிய போலீஸ்

சென்னை

20

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
chn(4)

சென்னையில் வெள்ளி வியாபாரி தவறவிட்ட 26 லட்சம் ரூபாய் பணப்பையை எடுத்துச் சென்றவரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.

வெள்ளி வியாபாரி தவறவிட்ட பணப்பை

ஓட்டேரியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார், அயனாவரத்தில் வெள்ளி நகை கடை வைத்துள்ளார். இவர் கடந்த இரண்டாம் தேதி சவுகார்பேட்டையில் உள்ள ஒரு கடையில் வெள்ளிக்கட்டிகளை விற்றுவிட்டு 26 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது புளியந்தோப்பு அடுத்த ஓட்டேரி அருகே சென்றபோது அவரது பணப்பை தவறி கீழே விழுந்தது. இதனை தினேஷ்குமார் சரிவர கவனிக்கவில்லை. பின்னர் ஓட்டேரி எஸ் ஆர். பி.சிட்டி சென்டர் அருகே சென்றபோதுதான் பணப்பை கீழே விழுந்தது தினேஷ் குமாருக்கு தெரியவந்துள்ளது.

பணப்பையை எடுத்து சென்ற நபர் கைது

இதையடுத்து ஓட்டேரி காவல் நிலையத்தில் தினேஷ்குமார் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, வாகன பதிவு எண்ணை கண்டுபிடித்துடன் பணப்பையை எடுத்துச் சென்றது புளியந்தோப்பு கே.பி பார்க்கைச் சேர்ந்த அசோக் என்பதை உறுதி செய்தனர். இதனை அடுத்து அசோக்கை சென்னை ஓட்டேரி காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இதனைஅறிந்த அசோக் கடந்த 9ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஓட்டேரி குற்றப்பிரிவு காவல் துறையினர் அசோக்கை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

ரூ.18 லட்சம் மீட்பு

இதனை அடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் 18 லட்சம் ரூபாய் ரொக்கம் மீட்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 8 லட்ச ரூபாயை அசோக் செலவழித்து விட்டதாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அதில் தனது மனைவிக்கு இரண்டு சவரன் செயின், மகனுக்கு பைக் வாங்கி கொடுத்ததுடன்சில மாதங்களுக்கு முன்பு அடகு வைத்த தங்க நகைகளையும் மீட்டுள்ளார். மேலும்
உறவினர்கள் சிலருக்கும் செலவுக்கு பணம் கொடுத்தாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே அசோக்கின் மனைவி கவிதா உள்ளிட்ட மேலும் மூன்று பேரை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Link
இன்னும் OTP வரல சார்...

இன்னும் OTP வரல சார்...


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
51 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved