திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, அதிக வட்டிக்கு கடன் வாங்கிய இறைச்சி கடை உரிமையாளரை, காரில் கடத்தி சென்று அறையில் அடைத்து சித்திரவதை செய்ததாக, கந்துவட்டி கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம் கீழ்பள்ளிப்பட்டை சேர்ந்த கந்து வட்டிக்காரன் தீபன், தனது நண்பர்களான அபிஷேக், ராகுலுடன் சேர்ந்து, கண்ணமங்கலத்தை சேர்ந்த ஜபருல்லாவை கடத்தி சென்றுள்ளார்.