கொரோனா காலத்தில் வேலையிழந்த டிப்ளமோ படித்த நபர், ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த ஞானபிரகாஷ் சென்னையில் வாகனங்களுக்கு பிரேக் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கொரோனாநேரத்தில் வேலையை இழந்த இவர், திருடலாம் என முடிவு செய்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் செல்லும் ரயிலில் சிவகாமியிடம் 10 சவரன் நகை, மயிலாடுதுறையில் சரோஜினியிம் 6 சவரன் நகை, சிதம்பரத்தில் மணிமேகலையிடம் 10 கிராம் நகையை பறித்துவிட்டு தப்பி ஓடினார். இந்நிலையில் 2 மாதங்களுக்கு பிறகு ஞானபிரகாஷை ரயில்வே போலீசார் கைது செய்தனர்