news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் மஹா சிவராத்திரி
tv

Also Watch

tv

Read this

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் மஹா சிவராத்திரி

கும்பகோணம், தஞ்சாவூர்

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Temple event

மஹா சிவராத்திரி :

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் பிறையணி அம்மன் சமேத நாகநாத சுவாமி திருக்கோவில் நவக்கிரக ஸ்தலங்களில் ராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும்
இத்தலத்தில் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா, விசேஷ ஹோமம், 1,008 சங்காபிஷேகம் தொடர்ந்து இரவு முழுவதும் நான்கு கால அபிஷேகம் ஆராதனைகள் என விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இன்று மஹாசிவராத்திரியை முன்னிட்டு இரு புனிதநீர் நிரப்பிய கடங்கள் மற்றும் புனித நீர் நிரப்பிய 1,008 வலம்புரி சங்குகளை நெல்மணிகள் மீது வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து, மலர்கள் சூட்டி, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க விசேஷ ஹோமம் வளர்த்து, பூர்ணாஹஹூதி நடைபெற்றது.

பின்னர் நாகநாதசுவாமிக்கு பல்வேறு விதமான வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகமும், தொடர்ந்து 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கலசத்தில் உள்ள நீரை கொண்டு, சுவாமிக்கும், அம்பாளுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பட்டு மற்றும் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த நாகநாதசுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Link
ஒரே தட்டில் சாப்பிட்ட இந்து, முஸ்லீம்

ஒரே தட்டில் சாப்பிட்ட இந்து, முஸ்லீம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
6 hrs 19 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved