அதிமுகவில் நீண்டகாலமாக இருந்து வந்த புகைச்சல் அவிநாசி அத்திக்கடவு பாராட்டு விழாவில் வெளிவந்ததாக கொ.ம.தே.க. தலைவர் கொங்கு ஈஸ்வரன் தெரிவித்தார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுத்திகரிப்பு நிலையங்களில் அகற்றப்படாமல் இருக்கும் திடக்கழிவுகளால் நீர்நிலைகள் மாசுபடும் வாய்ப்பு உள்ளதால், இதற்கான தீர்வை அரசு உடனடியாக கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என்றார்.