கூலித் தொழிலாளி கைது : வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பேரணாம்பட்டு போலீசருக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில் பேர்ணாம்பட்டு போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்ட பொழுது அவன் பேரணாம்பட்டு கோட்டை காலனி பகுதியை சேர்ந்த விஷால்(19) என்பதும் போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடி முயன்ற போது. போலீசார் அவனை சுற்றி வளைத்து மேலும் விசாரணை மேற்கொண்ட பொழுது அவன் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து பேர்ணாம்பட்டு நகரில் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது மேலும் அவனிடம் இருந்த 60 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து பேரணாம்பட்டு போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Related Link பத்திரத்தில் எழுதி கொடுக்கிறோம்