திருவாரூர் மாவட்டம் மேலபருத்தியூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்து 30 சவரன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலபருத்தியூர் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி, வெளியே சென்ற நிலையில் அவரது மனைவி கண்ணகி மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீடு திரும்பிய நாராயணசாமி மனைவி கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்திலும், அவர் அணிந்திருந்த 30 சவரன் நகைகள் காணாமல் போனது கண்டும் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் மற்றும் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.