news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அம்மான்னு கூப்பிட்டு 2 மாசம் ஆகுது ஐயா....கதறிய தாய்
tv

Also Watch

tv

Read this

அம்மான்னு கூப்பிட்டு 2 மாசம் ஆகுது ஐயா....கதறிய தாய்

திருவாரூர்

322

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tvr 4

முத்துப்பேட்டை காவல் நிலையத்தை விடுதலை சிறுத்தை கட்சியினர் முற்றுகையிட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து போலீசாருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இளைஞர் மீது பொய் வழக்கு?

கற்பாகநாதர்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஹரிகரன் என்பவர் சென்ற மாதம் நடந்த இருசக்கர வாகன விபத்தில் படுகாயம் அடைந்து ஒரு பகுதி கண்ணை இழந்தார். இதற்கு முத்துப்பேட்டை காவல்துறை உதவி ஆய்வாளர் சிங்காரவடிவேல் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவருக்கு ஆதரவாக செயல்பட்டு படுகாயம் அடைந்த ஹரிகரன் மீதே பொய் வழக்கு பதிவு செய்தததாக கூறப்படுகிறது.

விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் போராட்டம்

இந்த சம்பவத்தை கண்டித்தும், அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க கோரியும், தொடர்ச்சியாக ஜாதி ரீதியாகவும், அனுமதியின்றி செயல்படும் டாஸ்மார்க் பார்களுக்கும், கஞ்சா மற்றும் கட்ட பஞ்சாயத்து காரர்களுக்கு உடந்தையாக இருக்கும் காவல்துறையை கண்டித்தும் இன்று காலை விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.


காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரதம்

மாவட்ட செயலாளர் வெற்றி தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட விசிகவினர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த முத்துப்பேட்டை டிஎஸ்பி ராஜி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்ட போது போலீசாருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Link
சீமானுக்கு பேச கற்றுத் தந்ததே கலைஞர் தான்...

சீமானுக்கு பேச கற்றுத் தந்ததே கலைஞர் தான்...


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

2
16 hrs 6 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved